தேர்தலால் குடும்பத்தில் தொடரும் சலசலப்பு! தாய் தந்தை மீது தளபதி விஜய் வழக்கு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் படம் என்றாலே சில அரசியல் சம்பந்தப்பட்ட காட்சியும் சமுக அக்கடையுடைய காட்சிகளும் இடம் பெரும். அப்படி அரசியல் பேசுவதால் அதில் நுழைய வாய்ப்பு இருக்கிறது என்று பலர் கூறி வருகிறார்கள்.

அப்படியாக வருகிற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தனித்து போட்டியிட விஜய் அனுமதி அளித்தும் தன்னுடைய புகைப்படம், கொடியை பயன்படுத்தவும் ஒப்புக்கொண்டார் என்று செய்திகள் வெளியாகி டிரெண்டானது. இந்நிலையில், விஜய் தன்னுடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தாய் ஷோபா உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு ஒன்று போட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

விஜய்யுடைய தரப்பில் இருந்து, சென்னை உரிமையியல்‌ நீதிமன்றத்தில்‌, நடிகர்‌ விஜய்‌யின்‌ பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தந்தை எஸ்‌.ஏ.சந்திரசேகர்‌, தாய்‌ ஷோபா, விஜய்‌ மக்கள்‌ இயக்க நிர்வாகிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதுதொடர்பாக வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக கூறியுள்ளனர்.

இதனால் குடும்பத்தினருக்கிடையில் சில சலசலப்புகள் ஏற்ப்பட்டுள்ளது என்றும் ரசிகர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. இதிலிருந்து நடிகர் விஜய் தற்போதைய நிலையில் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்