இதையும் விட்டுவைக்காத அட்லீ.. மறைந்த நடிகையின் ஸ்டைல்-ஐ அப்படியே காப்பி அடிக்கும் தளபதி விஜய்!!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பெயரோடும் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய், வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் ஒவ்வொரு படத்திலும் புதுவகையான ஸ்டைல்-ஐ பயன்படுத்த இயக்குனர்கள் பல விதமாக இயக்குவதுண்டு.
அப்படி தெறி படத்தில் இயக்குனர் அட்லீ செண்டர் ஃபிரஸ் போன்ற சிவிங்கத்தை கையில் வைத்து ஸ்டைல்-ஆக வாயில் போடுவதை விஜய்க்கு அறிமுகப்படுத்தினார்.
அப்படத்தில் இருந்து விஜய் பிகில், மாஸ்டர், வாரிசு படம் உட்பட பல படங்களில் அந்த ஸ்டைல்-ஐ காமித்து இருப்பார்.
ஆனால் விஜய்க்கு முன்பாகவே மறைந்த நடிகை செளந்தர்யா தெலுங்கு படம் ஒன்றில் அதுபோன்ற ஸ்டைலில் சிவிங்கத்தை வாயில் போட்டுள்ளார்.
இதனை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில் விஜய் சச்சின் படத்திலேயே இதை செய்திருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள்.
Soundarya did it way before #Thalapathy ? pic.twitter.com/9OSVKN9EuG
— Hemanth Raj (@thehemanthraj) February 22, 2023