போட்டிப்போட்டு கமிட்டாகும் விஜய் தேவரகொண்டா! பழைய ஆட்டத்தை ஆரம்பிக்கும் சமந்தா, பூஜா ஹெக்டே

Samantha Vijay Deverakonda Pooja Hegde
By Edward May 18, 2022 07:44 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன்பின் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கம் செல்ல ஆரம்பித்தார்.

அதேபோல் அடுத்த ஆண்டு நடிகை சமந்தா தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் துணை நடிகையாக இருந்து பின் அதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அடுத்த ஆண்டு கதாநாயகியாக அறிமுகமாகினார் சமந்தா.

தற்போது இருவரும் தமிழ், தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் அதிகளவில் இருக்கும் நடிகைகளாக இருந்து வருகிறார்கள். இவ்விருவருக்கும் வாய்க்க்கால் தகராறு பல ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருந்து வருவதாக செய்திகள் அப்போதில் இருந்தே பரவி வருகிறது.

சமந்தாவுடன் பிரச்சனை:-

பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிய அடுத்த ஆண்டு தான் நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமாகுகிறார். அப்போது இருவரும் நட்பாக பழகிய சமயத்தில் பூஜா ஹெக்டேவின் சமுகவலைத்தளம் முடக்கப்பட்டதை சமந்தா அவருடைய தோழிகளுடன் கலாய்த்து வந்தனர். இதையடுத்து சமுகவலைத்தளத்தில் இருவரின் ரசிகர்களும் சண்டை போட்டுக்கொண்டு பெரிதாக்கினர்.

ராதே ஷ்யாம் - பீஸ்ட்:-

இது ஒருபக்கம் இருக்க பூஜா ஹெக்டே படங்களில் நடிக்க கவனம் செலுத்து வந்தபோது ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடித்து படுதோல்வியையும் சந்திந்துள்ளார் பூஜா. அதேசமயம் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய ரோலில் நடித்து தோல்வியையும் சந்தித்துள்ளார்.

சினிமாவில் போட்டி:-

ஏற்கனவே பூஜா ஹெக்டே ஒரு படத்திற்கு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியதை போன்று சமந்தாவும் புஷ்பா படத்தில் படுமோசமான குத்தாட்டத்தை போட்டு பழித்தீர்த்தார் என்று கூறப்பட்டது.

தற்போது அதேபோல் சமந்தா நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடிபோட்டு குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் நான் மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் பூஜா ஹெக்டேவும் தன் பங்கிற்கு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இப்படியிருக்கையில் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கும் சமந்தா ரசிகர்களும் வாக்குவாதத்தில் இருவரில் யார் பெஸ்ட் என்ற கருத்துக்களை கூறி சண்டையிட்டு வருகிறார்கள்.