சமந்தாவா? ராஷ்மிகா மந்தனாவா? காதலி புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் விஜய் தேவரகொண்டா..
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாக நடித்து காதல் கிசுகிசுவிலும் சிக்கி வருவார்.
அப்படி ஆரம்பத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் காதலில் இருந்து ரகசிய அவுட்டிங் சென்ற புகைப்படங்களும் வெளியானது. அதனை தொடர்ந்து நடிகை அனன்யா பாண்டேவுடனும் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.
தற்போது நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு பின் அதிகமான நெருக்கமும், பொது நிகழ்ச்சிகளில் ரொமான்ஸ் செய்தும் எல்லைமீறி நடந்து கொண்டார் விஜய் தேவரகொண்டா.
இதனால் விரைவில் சமந்தாவுடன் டேட்டிங்கிற்கு செல்லுவார் என்ற கேள்வி டோலிவுட் வட்டாரம் உட்பட பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா, ஒரு பெண்ணின் கையை பிடித்தது போல் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சமந்தாவா? இல்ல ராஷ்மிகாவா என்று கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
