இரவு பார்ட்டியில் படுமோசமான ஆடையில் அனன்யா பாண்டே! இளம் நடிகைக்கு ரூட்டை போட்ட விஜய்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக குறுகிய காலக்கட்டத்தில் இடம் பிடித்தவர் விஜய் தேவரகொண்டா. Pelli Choopulu என்ற தெலுங்கு படத்தின் மூலம் லீட் ரோலில் நடிக்க ஆரம்பித்த விஜய், அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
அப்படம் கொடுத்த வரவேற்பு, தமிழ், இந்தி என ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்திற்கு பிறகு கீதா கோவிந்தம், தமிழில் நோட்டா, Dear Comrade போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இரு படங்களில் ராஷ்மிகா மந்தனாவுடன் நடித்து காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.
இருவரும் இரவில் சந்தித்து டின்னர் சாப்பிட்ட வீடியோ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நடிகை சார்மி கவுர் இயக்கத்தில் லிகர் படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் இணையத்தில் கசிந்துள்ளது.
இந்நிலையில் பால்வுட் பிரபலம் கொடுத்த இரவு பார்ட்டிக்கு சென்ற விஜய் தேவ்ரகொண்டா அனன்யா பாண்டியேவுடன் இணைந்து சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தேவரகொண்டாவுக்கு இரு நடிகைகள் போட்டிப்போட்டு கிசுகிசுக்களில் சிக்குவது இதுஒன்றும் புதிதல்ல.