நான் அதை இதுவரை செய்ததில்லை.. இந்த வருடம் எனக்கு திருமணமா!! ஓப்பனாக பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா..

Vijay Deverakonda Marriage Tamil Actress Actress
By Edward Mar 30, 2024 08:30 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஃபேமிலி ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாகூர் நடித்துள்ளார். வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஃபேமிலி ஸ்டார் படம் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா பிரமோஷனுக்காக ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

சமீபத்தில் தமிழில் அளித்த பேட்டியொன்றில் காதல் மற்றும் திருமணம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் நீங்கள் எதிர்பார்க்கும் காதல் பிரபோஸல் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் தேவரகொண்டா, எனக்கு எந்த பிரபோஸலும் தேவையில்லை.

என் வாழ்க்கையில் யாருக்கும் பிரபோஸ் பண்ணதில்லை. எதிர்பார்க்கவும் இல்லை. அதை செய்யவேண்டும் என்றால் நான் செய்வேன், என்னுடைய ஸ்டைலில் செய்வேன். 34 வயதில் 6, 7 வித்தியாசமான வாழ்க்கையை சந்தித்து இருக்கிறேன்.

மேலும், இந்த வருடம் நீங்கள் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்ற செய்தி வைரலாகிறது, அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்கப்பட்டது. அது இல்லை என்று கூறியிருக்கிறார்.