நிச்சயம் வரை சென்று நின்று போன திருமணம்! எல்லாம் விஜய் மேல் இருந்த காதல் தான்..
தெலுங்கு சினிமாவில் சிறு காலகட்டத்திலேயே முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் புஷ்பா படத்தின் மூலம் மார்க்கெட்டை எகிறவைத்தாலும் படத்தில் அவ்வளவாக பேசப்படவில்லை.
கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமாகிய ராஷ்மிகா, கீதா கோவிந்தம் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி போட்டு நடித்தார். அந்த கெமிஸ்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றப்பின் அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்தனர்.
இதற்கிடையில் ராஷ்மிகாவிற்கு கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் நிச்சம் நடந்தது. அதன்பின் சில காரணங்களால் திருமணம் வரை சென்று நின்று போனது. இதனால் படங்களில் கவனம் செலுத்து கடுமையாக உடற்பயிற்சி போட்டோஷூட் என வெளியிட்டு வந்தார்.
இதற்கிடையில், விஜய் தேவரகொண்டாவுடன் இரவில் வெளியில் சுற்றுவதுமாக இருந்து வந்தார். சமீபத்தில் கூட புஷ்பா படத்திற்கு பிறகு வெளியில் டின்னர் சென்ற வீடியோ வெளியானது.
இதனால் இருவருக்கும் விரைவில் திருமணம் என்று செய்திகள் வெளியாகி பரவியது. இந்த செய்திகளால் கடும் கோபத்தில் இருந்த விஜய் தேவரகொண்டா, நான்சன்ஸ் இதுபோன்ற செய்திகளை விரும்புவதில்லை என்று கூறியுள்ளார்.
