விஜய்யுடன் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தும் வாரிசு நடிகை!! லீக்கான ரிலேஷன்ஷிப் புகைப்படம்..
சினிமாவை பொறுத்தவரை நடிகை நடிகர்கள் ஒரே படத்தில் அடுத்தடுத்து நடித்து வெளியில் சுற்றினாலும் அதை ரசிகர்கள் ரியல் ஜோடிகளாகவே பேசுவார்கள்.
அப்படித்தான் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் காதலில் இருப்பதாகவும் இருவரும் ரகசியமாக அவுட்டிங் சென்று ஊர்சுற்றி வருவதாகவும் கூறப்பட்டு சில புகைப்படங்கள் வெளியானது.
இதை இருவரும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் ஒரு திருமணத்திற்காக தன் வீட்டில் ரெடியானப்பின் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
தற்போது அந்த புகைப்படத்தை வைத்து விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்து வருவதை உறுதி செய்துள்ளனர்.
அப்படி ஆதாரமாக விஜய் தேவரகொண்டா யோகா செய்யும் போது எடுத்த புகைப்படமும் ராஷ்மிகா வெளியிட்ட புகைப்படமும் ஒரே வீட்டில் எடுத்துள்ளது என்று ரசிகர்கள் கண்டுபிடித்து அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.