ரூ. 100 கோடி டீல் வைத்த நெட்ஃபிளிக்ஸ்!! ரிஜெக்ட் செய்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா...

Vijay Deverakonda Rashmika Mandanna Marriage Netflix
By Edward Feb 14, 2026 10:34 AM GMT
Report

தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ரகசியமாக காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்றும் கூறப்பட்டு வந்தது. அந்தவகையில் அவர்களின் திருமணம் பிப்ரவரி 26 ஆம் தேதி நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே நடிகை நயன் தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தங்களின் திருமண வீடியோ உரிமைகளை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 25 கோடிக்கு விற்றனர்.

ரூ. 100 கோடி டீல் வைத்த நெட்ஃபிளிக்ஸ்!! ரிஜெக்ட் செய்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா... | Vijay Deverakonda Rashmika Reject Ott Deal Wedding

இதில் நயன் தாரா தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பேசியிருந்தார். அவரைப்போல் நடிகை ஹன்சிகா - சோஹைல் கத்தூரியாவும் தங்களின் திருமண வீடியோ ஹன்சிகாஸ் லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் ஹாட்ஸாரில் வெளியிட்டார்.

மேலும் நாக சைதன்யா - சோபிதா ஜோடியின் திருமண வீடியோவுக்கு நெட்ஃபிளிக்ஸ் 50 கோடி ஆஃபர் கொடுத்தும் ஏற்க மறுத்துவிட்டனர். ஆந்த வரிசையில் தற்போது விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடியும் இணைந்துள்ளனர்.

அப்படி நெட்ஃபிளிக்ஸ் அவர்களின் திருமண வீடியோவுக்கு ரூ. 100 கோடி நிர்ணயம் செய்தததை நிராகரித்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையை கேமரா முன் வைக்க விரும்பாததால், குடும்பத்தினர் மத்தியில் தனிப்பட்ட முறையில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.