மனைவி சங்கீதா, அப்பா, அம்மாவுடன் தீபாவளி கொண்டாடிய விஜய்!! வைரலாகும் புகைப்படம்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். லியோ படத்தினை தொடர்ந்து தன்னுடைய 68வது படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் அரசியல் சார்ந்த பல செயல்களை தன் ரசிகர்கள் மூலம் செய்து வருகிறார்.
ஆனால் தன் குடும்பத்தினரை கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகிறார் என்ற விமர்சனம் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
பெற்றவர்களை கைவிட்டு விட்டார் என்ற விமர்சனம் எழ ஆரம்பித்து அப்பா - மகன் சண்டை வரை பேசப்பட்டது.
அதன்பின் மனைவி சங்கீதாவுடன் கருத்து வேறுபாட்டால் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் பரவியது.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் விஜய் தன் மனைவி சங்கீதா, அம்மா ஷோபா, அப்பா எஸ் ஏ சந்திரசேகருடன் வீட்டில் தீபாவளி கொண்டாடியிருக்கிறார்.
அப்புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
You May Like This Video