திருமணம் ஆகாத நடிகையுடன் நடிகர் விஜய் செய்த விஷயம்.. அதுவும் எந்த இடத்தில் தெரியுமா

Vijay Keerthy Suresh
By Kathick Jun 29, 2022 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் First லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடலுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

நடிகர் விஜய்யின் திரைவாழ்க்கையில் 2017ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பைரவா. இப்படம் தோல்வியடைந்தது. பைரவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுடன், நடிகர் விஜய் சிரித்து சிரித்து பேசும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 29 வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை என்பதும், தொடர்ந்து பல படங்களில் பிசியாக கீர்த்தி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து பைரவா படம் மட்டுமின்றி சர்கார் படத்திலும் ஜோடியாக நடித்துள்ளார்கள்.