மொட்டையுடன் காமெடி நடிகருக்கு கார் ஓட்டிய தளபதி விஜய்! ஷாக்காகும் ரசிகர்கள்

vijay thalapathy Harbhajan sathish sarkar
By Edward Dec 20, 2021 06:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சதீஷ். எப்போதும் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சதீஷ் பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் நல்ல நெருக்கத்தோடு இருந்து பழகி வருகிறார்.

சமீபத்தில் ஹர்பஜன் சிங் காரில் உட்கார்ந்தபடி இது ஒன்றும் மோசமான பயணம் இல்லை என்ற கருத்தோடு புகைப்படத்தை வெளியிட்டார். இதற்கு நடிகர் சதீஷ், பைரவா படத்தின் போது தளபதி விஜய்யுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து இதுதான் என்னுடைய பெஸ்ட் என்று குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட அப்புகைப்படத்தை தற்போது வெளியிட்டது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு காரணம் புகைப்படம் எடுக்கப்பட்ட போது விஜய் மொட்டை அடித்தபடியாக இருந்திருப்பதுதான். தெறி படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக எடுக்கபட்ட சமயம் தான் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.