விஜய் - மனைவி சங்கீதா குடும்ப பிரச்சனை!! இடையில் மாட்டி முழிக்கும் திரிஷா!! பிரபலம் கூறிய உண்மை..
சினிமா பிரபலங்கள் என்றாலே பலவிதமான சர்ச்சை செய்திகளை சந்திக்க நேரிடும். அந்தவகையில் நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பம் பற்றிய செய்திகள் சமீபகாலமாக பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. விஜய்யுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாகத்தான் அவரது மனைவி சங்கீதா, வாரிசு மற்றும் லியோ பட விழாக்களில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.
அந்த பேச்சு முடிந்தப்பின் தற்போது லியோ படத்தில் நடிகை திரிஷாவுக்கு லிப்லாக் காட்சியில் நடித்தது சங்கீதாவிற்கு பிடிக்கவில்லை, அதனால் குடும்பத்தில் பிரச்சனை என்றும் கூறி வருகிறார்கள். இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் சே குவாரா ஜெய் சங்கர் பேட்டியொன்றில் கலந்து கொண்டு விளக்கமளித்துள்ளார்.
அதில், விஜய் அம்மா மட்டுமே வந்தார்கள், ஆனால் மனைவி, அப்பா, அனிருத் வரவில்லை என்று கேள்வி எழுந்து வருவதற்கு பதிலளித்துள்ளார். பொதுவாக சினிமாவில் ஒரு படத்தின் வெற்றி விழா. அதற்கு குடும்பத்தினர் எல்லோரும் வரவேண்டும் என்பது கிடையாது. கடந்த காலத்தில் வந்திருக்கிறார்கள் ஏன் இதற்கு வரவில்லை என்று கூற விமர்சகர் என்ற பெயரில் இருக்கிறார்கள்.
இதற்கு 3-ஷா காரணம், 4-ஷா காரணம் என்று சிலர் சொல்றாங்க. ஒரு குடும்பத்தில் அன்றைக்கு ஏதாவது சின்ன சின்ன உரசல்கள் இருக்கலாம். அது காலப்போக்கில் சரியாக போகிறது. இந்த படத்தில் இல்லை என்றால் அடுத்த படத்தில் வரலாம். இதை ஏன் சினிமா புலனாய்வு புலிகள் பேசுகிறார்கள். என்று புரியவில்லை.
குடும்பத்தோடு ஐக்கியமாக இருக்கும் விஜய்க்கு, 50 வயதற்கான பக்குவம் இருக்கிறது. குடும்பத்தை நிர்வகிக்கும் மனம் இருக்கிறது. இதை வைத்து பலர் பேர் பொழப்பாகவே நடத்துகிறார்கள். இதனால் தான், லிப்லாக் கொடுத்ததால் தான் என்று கூறுவது தவறு. இந்த காலக்கட்டத்தில் நெகட்டிங் பார்வைகள் அதிகரித்து முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
அதைத்தான் விரும்புகிறார்கள். இதைவைத்து தான் சினிமாவை வைத்து பலர் விமர்சிக்கிறார்கள். உண்மையாக இருந்தால் பேசுங்கள், நீங்களாக நினைத்து பேசாதீர்கள். அவர்கள் வீட்டில் ஏதோ பிரச்சனை இருக்கும். அதை சொல்ல விரும்பவில்லை என்று கோபத்தில் பேசியுள்ளார் ஜெய் சங்கர்.