விளம்பரத்திற்காக இப்படி செய்தாரா!! உண்மையை கூறிய மாற்றுத்திறனாளி ரசிகர் பிரபாகரன்

Vijay Vamshi Paidipally Varisu
By Edward Dec 17, 2022 06:16 AM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி அஜித்தின் துணிவு படத்துடன் மோதவுள்ளது.

இரு பெரிய படங்கள் அதுவும் தல தளபதி என்று போட்டிபோட்டுக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு வரும் பொங்கல் பெரிய தீபாவளியாகவும் விழாவாகவும் இருக்க போகிறது.

அதேசமயம் ஒரே நாளில் இரு படங்கள் வெளியாகுவதால் யாருக்கு எத்தனை தியேட்டர் என்ற போட்டி நிலவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் விஜய் தன்னுடைய ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை பனையூர் அலுவலகத்தில் இரண்டாம் முறையாக சந்தித்துள்ளார்.

அப்போது மாற்றித்திறனாளி ஒருவரை விஜய் தூக்கிக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. விஜய் விளம்பரத்திற்காகவும் தன் அரசியல் நோக்கத்திற்காகவும் இப்படி செய்கிறார் என்று விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் அந்த மாற்றுத்திறனாளி நபர் சமீபத்தில் அங்கு என்ன நடந்தது என்ற தகவலை பகிர்ந்துள்ளார். நிகழ்ச்சியில் என்னால் நடக்கமுடியாமல் கஷ்டப்பட்ட போது அங்கிருந்த நண்பர்கள் என்னை தூக்கிச்சென்றனர்.

இதனை பார்த்த தளபதி விஜய், அவரே கீழே ஓடி வந்து என்னை தூக்கிச்சென்றார். அதோடு நன்றாக இருக்கிறீர்களா எதாவது வேண்டுமா சொல்லுங்கள் கண்டிப்பாக செய்கிறேன் என்றும் கேட்டார் என அந்த நபர் கூறியுள்ளார்.