விபத்தில் படுகாயமடைந்த ரசிகர்கள்.. கண்டுக்காமல் சென்ற நடிகர் விஜய்

Vijay Thalapathy Vijay Makkal Iyakkham
By Kathick Nov 21, 2022 11:15 AM GMT
Report

நடிகர் விஜய் நேற்று தனது ரசிகர்களை பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்தித்தார். விஜய் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து பனையூருக்கு காரில் செல்லும் வழியில் ரசிகர்கள் சிலர் விஜய்யை பின் தொடர்ந்தனர்.

காரில் சென்று கொண்டிருக்கும் விஜய்யை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ரசிகர்கள் காரின் வேகத்திற்கு இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றுள்ளனர். அப்போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியதால் ரசிகர்களுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் அவர்கள் படுகாயமும் அடைந்துள்ளனர். இந்த விபத்தை பார்த்தபின்பும் ரசிகர்களை கண்டுக்காமல் விஜய் போனதனால் ரசிகர்கள் விஜய் மீது கடும் கோபமடைந்துள்ளனர்.   

விபத்தில் படுகாயமடைந்த ரசிகர்கள்.. கண்டுக்காமல் சென்ற நடிகர் விஜய் | Vijay Fans Accident