அந்த பயம் இருக்கட்டும்.. விஜய்யை மோசமாக பேசிய நீதிபதி கருத்து நீக்கம்
விஜய் பற்றி அடிக்கடி சர்ச்சைகள் வருவது அதன் பின் அவற்றை விஜய் எப்படி எதிர்கொள்கிறார் என்பது அதிகம் பேசப்படுவதும் வழக்கமாக நடக்கும் ஒன்றாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு விஜய் பற்றி ஒரு தனி நீதிபதி சொன்ன விமர்சனம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
விஜய் தனது சொகுசு காருக்கு இறக்குமதி வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டதற்கு "நடிகர்கள் திரையில் மட்டும் சமூக நீதி பேசுகிறார்கள், ரீல் ஹீரோவாக இல்லாமல் உண்மையான ஹீரோவாக இருங்கள்" என அவர் கூறி இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விஜய் அந்த கருத்தை நீக்க வேண்டும் என விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரித்த நீதிமன்றம் தற்போது தனி நீதிபதி தெரிவித்த கருத்தை நீக்கி இருக்கிறது. இதை விஜய் ரசிகர்கள் வரவேற்று இருக்கின்றனர். அந்த பயம் இருக்கட்டும் என ஒரு ரசிகர் புல்லரித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
அந்த பயம் இருக்கனும் டா ?#Beast #Thalapathy66 pic.twitter.com/T3Mr5UyE3a
— ?????✨ (@Muthu_2021) January 25, 2022