இரண்டாம் திருமணம் செய்து கொண்ட விஜய்யின் அப்பா எஸ்ஏசி.. சாட்சியாக இருந்த விஜய்..
தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். தன் மகன் விஜய்யை நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தன்னுடைய அடுத்தடுத்தடுத்த படங்களில் நடிக்க வைத்தார். அதன்பின் விஜய் ஒரு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற்றும் அவருக்கு ஆறுதலாக இருந்து வந்தார்.
சமீபகாலமாக விஜய் தன் அப்பா அம்மாவை சரியாக பார்ப்பது கிடையாது என்றும் சுயநலத்திற்காக அவர்கள் மீது புகாரளித்து அவர்களை பகைத்து கொண்டு வருகிறார் என்றும் கூறப்பட்டு விமர்சிக்கப்பட்டும் வந்தது.
இந்நிலையில் விஜய்யின் தந்தை தன் வாழ்க்கையில் நடந்த ஆரம்பகாலக்கட்ட சினிமா வாழ்க்கை முதல் இன்றுவரையில் நடந்தவற்றை அனைத்தையும் யூடியூப் சேனல் மூலம் கூறி வருகிறார். அந்தவகையில் அவரது இரண்டாம் திருமணம் குறித்த தகவலையும் முதன்முறையாக தெரிவித்துள்ளார். நான் ஒரு கிறிஸ்தவர், ஷோபா இந்து குடும்பத்தில் பிறந்தவர்.

எம்ஜிஆரின் துணைவியார் கமலாம்பாள் அவர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். எந்த மதம் முறைப்படியும் நடக்காமல் அவர் தாலி கொடுத்து கட்டினேன். எந்த மதமும் சாராமல் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஒருநாள் ஷோபா என்னிடம் கூறியது. கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொள்வோமா என்று கூறினாள்.
நான் ஷோபாவை கிறிஸ்த்தவளாகிவிடு என்று கூறியது கிடையாது. ஏன் திடீரென கேட்கிறாய் என்று கேட்டேன். அதற்கு ஒரு வார்த்தை சொன்னால். ரெண்டு பேரும் கடலில் தனித்தனி படகில் செல்கிறோம்.
கடலில் அப்போது அலை அதிகமாக வந்தால் ரெண்டு பேரும் ஒரே இடத்தில் கரைசேர முடியாது என்று கூறினாள். அப்போது தான் நாங்கள் இரண்டு பேரும் ஒரே மதக்கோட்பாடோடு நடக்கவில்லையோ என்று நினைத்தேன்.
அப்படி தான் இரண்டாம் முறை கிறித்தவ முறைப்படி கல்யாணம் செய்து கொண்டோம் நானும் ஷோபாவும். ஒரே மனைவி இரண்டாம் திருமணத்தில் விஜய் சாட்சியாக நடைபெற்றது.
