விஜய்யை போட்டுகொடுக்க பிளான் போடும் சந்திரசேகர்! அப்பாவை பார்த்து பயப்படும் மகன்..
நடிகர் விஜய் இந்த அளவிற்கு உச்ச நட்சத்திரமாக கொடுக்கட்டி பறக்க காரணமாக இருந்தவர் அவரின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தான். தன் படத்திலேயெ விஜய்யை இயக்கி அறிமுகப்படுத்தினார். அதன்பின் மற்ற இயக்குனர்கள் படத்தில் நடிக்க சிபாரிசு செய்து வந்தார்.
தற்போது சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்கும் விஜய் தந்தை மீது சில காரணங்களால் மனக்கசப்பில் இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பேசாமலும் இருந்து வந்தனர்.
இந்நிலையில் விஜய் பற்றி தெரிந்த மற்றும் தெரியாத விஷயங்களை பகிர்ந்து கொள்ள யூடியூப் சேனல் ஒன்றினை துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் பாசிட்டிங் மற்றும் நெகட்டிங் சம்பந்தமான கருத்துக்களையும் கமுக்கமாக கூறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு காரணம் விஜய்யை கூடிய சீக்கிரமே அரசியல் எப்படியாவது ஈடுபடுத்திட வேண்டும் என்ற நோக்கம் தான் இதற்கு காரணமாம். இதனால் விஜய் ரசிகர்கள் அவரின் அப்பாவை திட்டியும் வருகிறார்கள். இந்த விஷயம் எந்தளவிற்கு உண்மை என்பது சந்திரசேகர் வீடியோவை ஆரம்பித்தால் தான் தெரியவரும்.