விஜய் செஞ்சா தப்பு.. இவர் செஞ்சா கரெக்ட்டா.. வெளுத்து வாங்கும் விஜய் ரசிகர்கள்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது.
பீஸ்ட் படத்தில் லாஜிக் இல்லை என்று தான், பலரும் குறை சொன்னார்கள். அதிலும் கிளைமாக்ஸ் காட்சி ஒன்றில் ஃபைட்டர் ஜெட் செல்லும் வேகத்தில் அதில் இருந்துகொண்டு மற்றொரு ஃபைட்டர் ஜெட் ஒட்டிக்கொண்டு போகும் வீரருக்கு விஜய் எப்படி சல்யூட் அடித்தார். இதில் என்ன லாஜிக் இருக்கிறது என்று பலரும் கேட்டனர்.
இந்நிலையில், சமீபத்தில் டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள Top Gun: Maverick படத்தின் ஜெட் ட்ரைன்னிங் வீடியோ வெளிவந்துள்ளது. அதில் ஜெட் ஓடிக்கொண்டு நடிகர் டாம் க்ரூஸ் தம்ஸ் அப் காட்டுகிறார். ஆனால், இதனை யாரும் விமர்சனம் செய்யவில்லை. இதனை கவனித்த விஜய் ரசிகர்கள், டாம் க்ரூஸ் செய்தால் லாஜிக் இருக்கு, விஜய் செய்தால் லாஜிக் இல்லையா என்று மீம் போட்டு வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
