ஒரே மிருக தோஷமா இருக்கே? விஜய் படங்களை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

vijay puli kuruvi beast suraa
By Edward Apr 17, 2022 03:27 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய் தெறி, மெர்சல், பிகில், மாஸ்டர் போன்ற பிளாக் பஸ்டர் படத்திற்கு பிறகு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு கொடுத்த பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

நெல்சன் இயக்கத்தில் நல்ல வரவேற்பு பெற்று வந்த இப்படம் சில தினங்களுக்கு முன் தியேட்டரில் ரிலீசானது. கலவையான விமர்சனத்தை பெற்றாலும் பீஸ்ட் படம் சில தவறுகளை செய்து கிண்டல் செய்யும் அளவிற்கு மாறி வருகிறது.

இந்நிலையில் மிருகங்கள் பறவைகள் பெயரை வைத்து படம் எடுத்த விஜய்யின் அப்படங்கள் படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

அதில் குருவி, சுறா, புலி போன்ற படங்கள் விஜய் வாழ்க்கையில் எல்லையில்லாத அளவிற்கு பிளாப் கொடுத்த படங்களாக அமைந்தது. இதை வைத்து மிருகம் என்ற தமிழ் பெயர் கொண்ட பீஸ்ட் படத்தையும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Gallery