சுயமரியாதை இழந்து அவன் பின் போவீங்களா? திமுகவினர் கிண்டல்.. ட்ரோலாகும் விஜய்!
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் விஜய். தற்போது பிஸியாக அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் என பெயரிலேயே வெற்றியை வைத்துக் கொண்டு கட்சியை தொடங்கி ஒவ்வொரு மாவட்ட மக்களையும் சந்தித்து வந்தார்.
அந்த வகையில், கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி விஜய் மக்களை சந்திக்கச் சென்ற போது, கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் தருவதாக அறிவித்திருந்தார்.

ட்ரோலாகும் விஜய்!
இந்நிலையில், சுறா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை வைத்தே தவெக தலைவர் விஜய்யை, திமுகவினர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக விஜய் செய்து வரும் நிவாரண உதவியை திமுகவினர் தொடர்ந்து வேண்டுமென்றே கிண்டல் செய்து வருகின்றனர். வீடியோ இதோ,
பணம் கொடுத்தா சுயமரியாதை இழந்து அவன் கூப்பிடுற இடத்துக்கு போவீங்களா - பனையூர் பண்ணையார். pic.twitter.com/f7mPnc7lMm
— R.S.Mohan (@rsmohan86) October 26, 2025