கோட் படத்திற்கு வந்த சோதனை!! அந்த இடங்களில் மார்க்கெட் இழந்த தளபதி...
Vijay
Venkat Prabhu
Greatest of All Time
By Edward
ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பல நடிப்பில் கடந்த செப்டம்பர் 5 ஆம்தேதி வெளியான படம் கோட்.
பல எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படத்தின் வசூல் முதல் நாளில் மட்டும் 126.32 கோடியை வசூலித்தது.
இதனை தொடர்ந்து கோட் படம் வெளியாகி 5 நாட்களை கடந்த நிலையில் வெறும் 310 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. ஓவர்சீஸ் பொறுத்தவரையில் இதுவரை 120 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது கோட் படம்.
ஆந்திரா, கேரளாவில் ரிலீஸ் ஆகியதில் இதுவரை10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்
விஜய்யின் கேரியரில் இரு மாநிலத்திலும் பெரிய தோல்வியை கோட் படம் கொடுத்திருக்கிறது என்பது ரசிகர்களுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.