சினிமாவிற்கு End Card போட்ட விஜய்!.. இவரின் கடைசி படம் யாருடன் தெரியுமா?
Vijay
Vetrimaaran
Actors
Tamil Actors
By Dhiviyarajan
1992 -ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் விஜய்.
ஆரம்பத்தில் தந்தை இயக்கத்தில் நடித்து விஜய், அதன் பின்னர் பல இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். தற்போது விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து இவர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார். சமீபகாலமாக விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் விஜய் தனது 70 வது படத்தை வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னர் விஜய் முழு நேரம் அரசியலில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.