விஜய்க்கு ஏற்பட்ட மோசமான நிலை.. வாஷ்அவுட்டான கோட் திரைப்படம்...
Vijay
Venkat Prabhu
Greatest of All Time
Box office
By Edward
ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பல நடிப்பில் கடந்த செப்டம்பர் 5 ஆம்தேதி வெளியான படம் கோட்.
பல எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படத்தின் வசூல் முதல் நாளில் மட்டும் 126.32 கோடியை வசூலித்தது. 4 நாட்களில் 9 ஆம்தேதி இரவு நேரப்படி 288 கோடி வசூலித்திருந்தது.
உலகளவில் 5 நாட்களில் 292 கோடி வசூலித்தும், தமிழ்நாட்டில் மட்டும் 115 கோடி வசூலித்தும் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று திங்கள் கிழமை மட்டும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா - தெலுங்கானா பகுதிகலில் 2 கோடி மட்டுமே வசூலித்து வாஷ் அவுட்டாகியிருக்கிறது.
இப்படியே சென்றால் 500 கோடியை வசூலிப்பதே கடினமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
