மகன் இயக்குனராக விஜய்-க்கு பிடிக்கலையா!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்..
நடிகர் விஜய் தன் அப்பா மூலம் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமாகி தற்போது டாப் நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான லியோ படம் 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படத்ததை அடுத்து அவரது 68வது படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் அரசியல் நுழைவு சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டும் வருகிறார்.
சினிமா, அரசியல் என்று இருக்கும் விஜய் தன் குடும்பத்தை கண்டுக்கொள்வதில்லை என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. அப்படி தன் பெற்றோர்களுடன் மன கசப்பு, மனைவி சங்கீதாவுடன் பிரச்சனை என்று பல செய்திகள் வெளியானது. தன்னை போல் தன் மகன் ஜேசன் சஞ்சய்யும் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்ற முடிவை மகனிடமே கொடுத்துவிட்டார் விஜய்.
தற்போது சினிமா படிப்பை முடித்து குறும்படம் இயக்கிய ஜேசன், லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தினை இயக்கவுள்ளார். ஆனால் இந்த விசயத்தை சங்கீதா தான் சிபாரிசு செய்து தன் மகனுக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் பூஜை தற்போது சைலெண்டாக லைக்கா நிறுவனம் போட்டுள்ளார்களாம்.
அந்த பூஜையில் விஜய் பங்கேற்காததை வைத்து பலர் கண்டபடி செய்திகளை பரப்பி வருகிறார்கள். இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்குனர் ஆவது குறித்து விஜய் ரொம்பவே சந்தோஷமாக இருப்பார் என்று நடன இயக்குனர் நடிகர் பிரபு தேவா கூறியிருக்கிறார்.
எனக்கே இப்படி இருக்கு என்றால் அவருக்கு எப்படி இருக்கும், அவர்களுக்கு அட்வைஸ் எல்லாம் செய்ய கூடாது தோல்வியை சரியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரபுதேவா கூறி அனைத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
#JasonSanjay
— விஜய் ரசிகை? (@Itsme__Visali) November 5, 2023
இயக்குநரானது எனக்கே ரொம்ப ஹேப்பினா அப்போ @actorvijay -க்கு எவ்ளோ சந்தோமா இருப்பாரு??❤
~ @PDdancing #Thalapathy68 #LeoIndustryBlockbuster pic.twitter.com/odLeK3LRVT