பிரச்சாரத்தை முடித்துவிட்டு தவெக தலைவர் விஜய், 4 மணி வரை ரகசிய மீட்டிங்!! எங்கு தெரியுமா?
தவெக தலைவர் விஜய்
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 80 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் தவெக தலைவர் விஜய் பல மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரங்களை நடத்தி வருகிறார். புதுச்சேரியை அடுத்து தற்போது ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார் விஜய்.

கோவை விமானநிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி தன்னுடைய காரில் சென்று பேசி வருகிறார் விஜய். 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே விஜய் பேசுவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்காக போலிஸார் 43 நிபந்தனைகள் விதித்தனர்.
ரகசிய மீட்டிங்
இந்நிலையில் ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டத்தை முடித்துவிட்டு மாலை 4 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து மீண்டும் சென்னைக்கு விஜய் திரும்புவார் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் கோவை லீமெரியடியன் ஹோட்டலில் விஜய் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.

அப்போது அவர் தனது கட்சியில் சேரக்கூடிய முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களை ரகசியமாக சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன், அதிமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை அங்கிருந்து அழைத்து வந்து தவெகவில் இணைய வைப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
அவர்களை தான் தன் சொந்த மண்ணில் தவெகவில் இணைய வைத்து செங்கோட்டையன், விஜய்க்கு சர்ப்ரைஸ் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.