ஜனநாயகன் சாட்டிலைட் உரிமை இத்தனை கோடிக்கு விற்பனை ஆகிவிட்டதா?

Vijay JanaNayagan
By Kathick Dec 08, 2025 02:30 AM GMT
Report

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், ப்ரியாமணி என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற 2026 ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. முன்னணி நடிகர்களின் படம் என்றாலே அப்படத்தின் ப்ரீ பிசினஸ் மிகப்பெரிய அளவில் நடக்கும். விஜய் படம் என்றால் சொல்லவே தேவையில்லை. அதிலும் இது கடைசி படம் வேறு, ப்ரீ பிசினஸ் பட்டையை கிளப்பி வருகிறது.

ஜனநாயகன் சாட்டிலைட் உரிமை இத்தனை கோடிக்கு விற்பனை ஆகிவிட்டதா? | Vijay Jananayagan Movie Satellite Rights

இதுவரை நடந்த ப்ரீ பிசினஸ் மட்டுமே ரூ. 500 கோடி இருக்கும் என்கின்றனர். ஆனால், இதுவரை இப்படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாமல் இருந்தது.

இந்த நிலையில், ஜீ நிறுவனம் ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், ரூ. 40 கோடிக்கு சாட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.