அப்பா அம்மாவின் இரண்டாம் திருமணத்தை நேரில் பார்த்த நடிகர் விஜய்.. இப்படியொரு பாக்கியம்...
இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் 80களில் கொடிக்கட்டி பறந்த சிறந்த இயக்குனராக திகழ்ந்து வந்தவர். தன் மகன் விஜய்யை வைத்து நாளைய தீர்ப்பு, விஷ்ணு உள்ளிட்ட பல படங்களை இயக்கி விஜய் வெற்றிக்கு ஒரு காரணியாக இருந்து வந்தார்.
விஜய் இப்படியொரு உச்சத்தை தொட எஸ் ஏ சந்திரசேகரின் பங்கு மிகப்பெரியது. அப்படி வளர்த்து ஆளாக்கிய அப்பா அம்மாவை சரியாக கவனிக்கவில்லை என்றும் பெற்றோர்கள் மீதே புகார் அளித்தவர் என்றும் விமர்சனங்கள் எழுந்து வந்தது.
இந்நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய யூடியூப் சேனலில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்தவகையில் முதல் ஷோபாவை எந்த மதத்தின் அடிப்படையிலும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
எம்ஜிஆர் அவர்களின் மனைவி கமலா அவர்களால் தாலி எடுத்துக்கொடுக்கப்பட்டு தான் நடந்தது என்றும் ஷோபா இந்தி நான் கிறிஸ்தவர் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தது. ஒருசில காரணமாக ஷோபா கூறியதால் இரண்டாம் முறை ஒரே மனைவியை கிறிஸ்தவ முறைப்படி கல்யாணம் செய்து கொண்டேன்.
அப்போது விஜய்க்கு 7 வயது இருக்கும் போது பெற்றோர்களின் திருமணத்தை காணும் பாக்கியம் கிடைத்தது. இப்படியொரு பாக்கியம் யாருக்கும் கிடைக்குமா என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
மேலும், ஷோபா இரண்டாம் கல்யாணம் செய்த போது கர்ப்பமாகவும் இருந்தார். வித்யா என்று பெண் குழந்தைக்கு பிறந்தது. இதனால் எனக்கு இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றும் எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.
