விஜய்யை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே இவர் தான்!! அதிர்ச்சியை கொடுத்த பத்திரிக்கையாளர்..
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராகவும் 100 கோடியில் சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கும் நிகழ்ச்சியை பிரம்மாண்ட முறையில் சில நாட்களுக்கு முன் நடத்தினார்.
அரசியல் ஈடுபாடு குறைத்த ஏற்பாடு தான் இந்த நிகழ்ச்சி என்று பலர் விவாதமாக பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் இப்படி அனைத்துமே செய்ய காரணம் இவர் தான் என்று பிரபல பத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.
விஜய், திண்டிவனத்தில் இருக்கும் பெரிய ஜோதிடர் ஒருவரின் சொல்படி தான் அனைத்தும் செய்கிறாராம்.

அந்த ஜோசியர் சாதாரணமானவர் கிடையாது ஜெயலலிதா முதல் அதிமுக சம்மந்தமானவர்களுக்கு அவர் தான் நல்ல நேரங்களை கூறி வருகிறார்களாம்.
அவர் சொல்படி தான் இந்த நிகழ்ச்சியே நடந்ததாகவும் எதிர்கால அரசியல் குறித்த அனைத்தும் அந்த ஜோதிகர் கையில் தான் இருக்கிறது என்று கூறியுள்ளனர் வலைப்பேச்சு அந்தணன், பிஸ்மி.