செருப்பால் அடித்த மர்ம நபர்!! படப்பிடிப்பில் நடிகர் விஜய் மீது வீசப்பட்டது இதுதான்..
லியோ படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவரது 68வது படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இடையில் தன் ரசிகர்களை சென்று பார்த்தும் வரும் விஜய், கடந்த மாதம் மரணமடைந்த கேப்டன் விஜயகாந்தின் இறுதி அஞ்சலி செலுத்த சென்றிருந்தார்.
அப்போது மர்ம நபரால் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது பெரியளவில் சர்ச்சையானது. இந்த விசயம் முடிந்த சில தினங்களில் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய், திண்டுகல்லுக்கு சென்று நிவாரண பொருட்களை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பை துவங்கிய விஜய், தன்னை காண அங்கு வந்திருந்த ரசிகர்களை பார்க்க கேரவன் மேல் ஏறி கை காட்டியும் பீஸ்ட் ஸ்டைலில் முத்தம் கொடுத்தும் இருந்தார்.
அப்போது விஜய்யை காண வந்த அவரது ரசிகர்கள், பூ மாலை வீசியும் பூக்களை அவர் மீது தூவியும் கொண்டாடி இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#TheGOATshootingdiaries pic.twitter.com/P9t1BXhpze
— venkat prabhu (@vp_offl) January 13, 2024