மகள், மனைவி இல்லாமல் கனடாவில் மகனை சந்திக்க போன விஜய்!! காரணமே இதுதான்...
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் லியோ படப்பிடிப்பை முடித்து அடுத்த 68வது படத்திற்கு தயாராகி வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கவுள்ளாராம்.
அதற்காக விஜய் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார் என்ற தகவலும் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி விமான நிலையத்தில் வந்துள்ள புகைப்படமும் இணையத்தில் வைரலாகியது.
68வது படத்தில் லுக் டெஸ்ட்டிற்காக தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில் விஜய் தன் மகன் ஜேசன் சஞ்சய்யுடன் கனடாவில் ரெஸ்ட்டாரெண்டில் சாப்பிட்டு, பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகள் திவ்ய ஷாஷா மற்றும் மனைவி சங்கீதா இல்லாமல் விஜய் ஏன் மகனை சந்தித்தார் என்ற கேள்வி எழுந்ததை அடுத்து, சஞ்சய் கூடிய சீக்கிரம் இயக்குனராக லைக்கா தயாரிக்கும் படத்தினை இயக்கவுள்ளார்.
அது குறித்து கலந்து விஜய் அமெரிக்காவிற்கு அவுட்டிங் சென்ற போது கலந்து பேசப்பட்ட புகைப்படம் தான் என்றும் கூறப்படுகிறது.
You May Like This Video

