பீருக்கு அடிமை! டின்னருக்கு யாருடன் டேட்டிங் சென்று இருக்கிறார் நடிகர் விஜய்.. புகைப்படம்..
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா குறுகிய காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவில் டாப் ஆர்டலில் இடம் பிடித்துள்ளார்.
2011ல் நுவ்விலா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அர்ஜுன் ரெட்டி படத்தால் மிகவும் கவனிக்கக்கூடிய நடிகராக மாறினார். இதையடுத்து மகாநதி. கீதா கோவிந்தம், நோட்டா, டாக்ஸிவாலா. டியர் காம்ரேட் போன்ற படங்கள் மூலம் பிரபலமானார்.
தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். தற்போது லிகர் படத்தில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் ஜோடியாக ஒருசில படங்களில் நடித்த போது இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் பரவின.
இருவரும் இரவு நேர பார்ட்டி விருந்து என ஜோடியாக வெளியில் செல்லும் புகைப்படங்களும் கசிந்தன.
தற்போது பீர் பர்க்கருடன் பிரபல ஓட்டலில் டின்னர் சாப்பிட்டு பீரை கையில் ஏந்தி எதிரே இருப்பவருக்கு கொடுக்கும்படியான புகைப்படத்தை விஜய் வெளியிட்டுள்ளார். எதிர்ல இருப்பது ராஷ்மிகா தானே என்று ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.