பையன் விஷயத்தில் தலையிடாத விஜய்! வேண்டவே வேண்டாம் என கெஞ்சிய சஞ்சய்..
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிய படம் பீஸ்ட். பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் இன்னும் சில நாட்களில் தியேட்டரிகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் பிரமோஷன் விஷயங்களை ஒதுக்கிய விஜய் மற்றும் படக்குழுவினர், விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற ஷோவை நேற்று ஒளிப்பரப்பு செய்துள்ளது சன் தொலைக்காட்சி. 10 வருடங்களுக்கு பிறகு விஜய் நெல்சன் கேட்கும் கேள்விகளுக்கு அமைதியாக பதிலளித்திருந்தார்.
இத்தனை வருடங்கள் பேட்டியை கொடுககாமல் ஒதுக்கியது முதல் அப்பா, மகன், ரசிகர்கள் வரை பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மகன் சஞ்சய் பற்றி பகிர்ந்து கொண்ட விஜய், நடிக்க வருவாரா வரமாட்டாரா என்ற விளக்கத்தை கொடுத்துள்ளார்.
எனக்கு தெரியவில்லை அவர் மைண்ட் எப்படி இருக்கிறது என்றும் என்னுடைய சப்போர்ட் கேட்டால் நான் கொடுப்பேன் நான் கட்டாயப்படுத்த மாட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் என்னை சந்திக்க வந்தார். எனக்கு தான் கதை கூற வருகிறார் என்று பார்த்தால் என் மகனுக்கு கதை கூற வந்தேன் என்று கூறினார்.
எனக்கு ஆசையாக இருந்தது அவன் நடிக்க வேண்டும் என்று ஆனால், நான் அவனிடம் சென்று கூறியதற்கு வேண்டவே வேண்டாம் இரண்டு வருடங்களுக்கு என்னை விட்டுவிடுங்கள் என்று கூறினான். கேமரா எடுப்பாரா நடிப்பாரா என்று அவர் விருப்பம் தான் என்று ஒரு அப்பாவாக விஜய் கூறியுள்ளார்.