விஜய்க்கு ஜோடிபோட்ட நடிகை சங்கீதாவா இது? மூக்கு கண்ணாடியுடன் அடையாளம் தெரியாமல் தருணம்..

vijay movie Sangeetha pair
By Jon Mar 08, 2021 11:44 AM GMT
Report

சினிமாவில் படங்கள் அமையாவிட்டால் பிரபலங்களின் நிலை விபரீதமாக முடியும். அந்த அளவிற்கு பல பிரபலங்கள் அடையாளம் தெரியாமல் சென்று விடுகிறார்கள். அந்தவகையில், 80களில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து பின் நடிகையாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானார் நடிகை சங்கீதா மாதவன் நாயர்.

1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் அதிக நாட்கள் ஓடிய படமாகவும், அதிக வசூலை எடுத்த படமாகவும் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் சினிமா விகடன் நண்பர்கள் நடிகை சங்கீதாவை சமீபத்தில் பேட்டி எடுத்துள்ளனர். அப்போது பார்ப்பதற்கு அடையாளமே தெரியாத அளவுக்கு சோடாபுட்டி, கொஞ்சம் வெயிட் எல்லாம் போட்டு ஆளே மாறிவிட்டார் சங்கீதா.

சங்கீதா தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் பெரும்பாலும் தன்னை விட வயது கொஞ்சம் அதிகமான நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்தார். அவர் முதன்முதலில் சம வயது நடிகருடன் ஜோடி போட்டது நடிகர் விஜய்யுடன் தான். மேலும், பூவே உனக்காக படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றிய சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த சங்கீதா கடைசியாக தமிழில் ஜெயம் மற்றும் கண் திறந்து பாரம்மா போன்ற படங்களில் நடித்திருந்தார்.


GalleryGallery