சங்கீதாவுடன் இருக்கும் போட்டோ!! ஏக்கத்துடன் தொண்டர்கள் முன் விஜய் கொடுத்த ரியாக்ஷன்...
விஜய் - சங்கீதா விவாகரத்து
விஜய்க்கும் சங்கீதாவுக்கு 1999ல் காதல் திருமணம் நடந்து இரு குழந்தைகள் இருக்கிறார்கள். சங்கீதா தன்னுடைய முழு சப்போர்ட்டை விஜய்க்கு வழங்கி சினிமாவில் விஜய்க்கு வளர்வதற்கு பக்கபலமாக இருந்தார். மேலும் பல படங்களில் விஜய்க்கு காஸ்ட்டியூம் டிசைனராகவும் இருந்துள்ளார். இப்படி இருக்கையில், விஜய் மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்து விவாகரத்து வழக்கு போட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

முக்கியமாக தன் கணவர் விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் பலமுறை கண்டித்தும் திருந்தவில்லை. எனக்கு கணவர் மூலம் நேருக்கடி ஏற்பட்டால் நடிகை குறித்து பொதுவெளியில் சொல்வேன் என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து ஒருசில நாட்களுக்கு பின் திரிஷாவுடன் ஒரே நிறத்தில் ஆடையணிந்து திருமண நிகழ்ச்சிக்கு சென்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் விஜய்.
இந்நிலையில் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வரும் 20 ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அரசியல் பரப்புரையின்போது விஜய் செய்த செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் விஜய் கன்னியாக்குமரிக்கு சென்று பரப்புரை செய்தார்.

போட்டோ
அப்போது அவரை பார்ப்பதற்கு வந்த ரசிகர்களில் ஒருவர், விஜயகாந்துடன் சங்கீதாவும், விஜய்யும் இருந்த புகைப்படத்தை ஃபிரேம் போட்டு கொண்டு வந்திருந்தார்.
அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியிலும் சரியாக அதை அடையாளம் கண்ட விஜய், அதை வாங்கி சில நொடிகள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தார். பின் தன்னுடைய பவுன்சர்களிடம் கொடுத்து வேனில் பத்திரமாக வைக்கும்படியும் கூறியிருக்கிறார்.
இதனை பார்த்த அவரது ரசிகர்கள், அண்ணனின் பார்வையே சொலிறது சங்கீதாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை, கூடிய விரைவில் நல்ல செய்தி கிடைகும் என்று நம்பிக்கையுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
#ThalapathyVijay spots a photo frame of him with his wife #Sangeetha and #Vijaykanth. Out of the entire crowd, he makes sure to receive it and looks at it emotionally 🥹 for a few seconds, then returns back normal and passes it to his security. pic.twitter.com/P60I23rr64
— Movies Singapore (@MoviesSingapore) April 14, 2026