கீர்த்தி சுரேஷ் வாழ்க்கையில் இதுநடக்கும்.. நடிகர் விஜய்யா இப்படி சொன்னார்
நடிகர் விஜய் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து இதுவரை இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
இதில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் பைரவா. இப்படத்தின் படப்பிடிப்பில் தான் நடித்த மகாநட்டி ( நடிகையர் திலகம் ) திரைப்படத்தின் ட்ரைலரை விஜய்க்கு காட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
அப்போது அதை பார்த்துவிட்டு, இதற்காக உனக்கு தேசிய விருது கிடைக்கும் என விஜய் கூறினாராம். அதனை கீர்த்தி சுரேஷ் ஒரு வாழ்த்தாக எடுத்துக்கொண்டு, அப்படியே விட்டுவிட்டார். ஆனால், விஜய் சொன்னது போலவே நடிகையர் திலகம் படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
இப்படத்திற்காக நீ தேசிய விருது வாங்குவாய் என என்னிடம் கூறிய முதல் நபர் விஜய் சார் தான் என சமீபத்தில் அளித்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.