நீதிபதியை திக்காடா வைத்த தளபதியின் கேள்வி ! கோடிக்கணக்கில் கார் வாங்கிய வழக்கு...

Thalapathy Vijay rollsroyce Cartax
By Edward Oct 26, 2021 01:40 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார் அதற்கு இறக்குமதி வரியை செலுத்தவில்லை என்று வருமான துறையினர் அபராதம் விதித்து வழக்கு போட்டது.

இதை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்ததோடு, ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார். இதையடுத்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அபராதம் விதித்த உத்தரவிற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கடின உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்தது தேவையற்றது என்றும் அவர் அப்படி பேசியது மனம் புண்படுத்தும் விதமாக இருந்தது என்றும் கூறப்பட்டட்டது.

மேலும் 2 கோடி ரூபாய் கூட அபராதம் செலுத்த தயார். ஆனால், எதிர்மறை கருத்தை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.