ஏ ஆர் முருகதாஸ் வேண்டாம் என ஒதுக்கிய விஜய்! இதுதான் உண்மையான காரணமாம்?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்ற இடத்தினை பிடித்து பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் மாஸ்டர் படம் வெளியாக நல்ல வசூலும் வரவேற்பும் பெற்றது. இதைதொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த வருட இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் தளபதி66 படத்தினை தெலுங்கு இயக்குநருடன் ஜோடி சேர்ந்துள்ளார் விஜய். அவருக்கு முன்னதாக இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யின் 66 வது படத்தினை இயக்க கேட்டதற்கு வேண்டாம் என்று விஜய் ஒதுக்கியுள்ளார்.
ஏற்கனவே துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஹார்டிக் படத்தினை கொடுத்து நல்ல மார்க்கெட்டை உருவாக்கி முருகதாஸை விஜய் ஏன் ஒதுக்கினார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு காரணம் என்ன என்ற உண்மை வெளியாகியுள்ளது. முதலில் முருகதாஸ் விஜய்யை சந்தித்து பாதி கதையை கூறியுள்ளார். தளபதிக்கு பிடித்துபோக இன்னொரு நாள் பாதி கதையை கூறக்கேட்டும் அதை கேட்டபோது முழு கதை செட்டாகாது என்று கூறியுள்ளார்.
ஆனால் இதை சன் பிச்சர்ஸ் நிறுவனம் ஓகே என்று கூறினால் கண்டிப்பாக பண்ணலாம் என்று கூறியுள்ளார் விஜய். சன் பிச்சர்ஸ் கதையை கேட்டு வேண்டாம் என ஒதுக்கியதால் விஜய் அப்படத்தினை வேறு ஒரு தயாரிப்பாளர்களை வைத்து எப்படி பண்ண முடியும் என்று கூறி ஏ ஆர் முருகதாஸை வழி அனுப்பி வைத்துள்ளாராம்.