லியோ ஷூட்டில் விஜய் தலையில் அடித்து மன்னிப்பு கேட்ட மிஸ்கின்!! பழிக்குபழி தீர்த்த தளபதி..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராகவும் 100க்கும் மேல் சம்பளம் வாங்கும் கதாநாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்கள். லியோ படத்தில் இயக்குனரும் நடிகருமான மிஸ்கினும் முக்கிய வில்லன் ரோலில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விஜய்யை குட்டிமா, விஜய்ம்மா, அண்ணா என்று கூப்பிடுவேன்.
விஜய்க்கு உடம்பில் பல அடிகள்பட்டு இருக்கிறது. ஒரு சமயம் லியோ ஷூட்டிங்கில் சண்டையில், திரும்பி ஒரு பன்ச் பண்ணினேன் இறங்கிடுச்சி மூஞ்சில. தலையில் இறங்கிவிட்டது நான் ஓடி கட்டிப்பிடித்து குட்டிமா சாரிடா செல்லன்னு சொன்னேன்.
பரவால அண்ணான்னு சொல்லி அவருக்கு சரியா நீங்க ரிகர்சல் பண்ணுன்னு சொல்லிட்டு போய்ட்டாரு. அதுக்கு அப்புறம் அவர் என்னை அடிச்சனும் எனக்கு முகத்தில் இறங்கிவிட்டது.
பதறி அண்ணா சாரின்னு சொன்னாரு, அதெல்லாம் ஒன்னும் இல்லை செல்லக்குட்டி, ஒவ்வொருவருக்கும் நடப்பது தான் லவ் ஈச் அதர் என்று கூறியதாக மிஸ்கின் தெரிவித்துள்ளார். இதனை நெட்டிசன்கள் சிலர் மிஸ்கினை பழிக்கு பழி வாங்கிவிட்டார் விஜய் என்று கலாய்த்து வருகிறார்கள்.