விஜய்யை கோடியால் குளிப்பாட்ட போகும் இயக்குனர்!! இதுவரை இல்லாத அளவிற்கு இத்தனை கோடி சம்பளமா?
தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நட்சத்திரமாகவும் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இப்படத்தினை தொடர்ந்து விஜய்யை 68வது படத்தினை இயக்குவது யார் என்று யூகிக்கும் தருவாயில், இயக்குனர் வெங்கட் பிரபு தான் இயக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியானது.
இந்நிலையில் நடிகர் விஜய் ஒரு படத்திற்காக சுமார் 100 கோடி சம்பளமாக பெற்று வருகிறார்.
லியோ படத்தில் 120 கோடி சம்பளமாக பெறப்பட்டுள்ள நிலையில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள தளபதி68 படத்திற்காக விஜய்க்கு சுமார் 200 கோடி சம்பளமாக வழங்கவுள்ளார்கள் என்ற செய்தி வாயடைக்க வைத்துள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரின் படமாக இப்படம் திகழ்ந்துள்ளது. இந்த விசயத்தை கேள்விப்பட்ட பலர் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.