விஜய் பரப்புரை!! இரண்டரை வயது குழந்தையை அழைத்து வந்த பெண்!! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்...
விஜய் பரப்புரை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் காவல்துறை அனுமதி வழங்கிய நேரத்திலேயே பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் எதிர்பாரத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் கடுமையான வெயிலின் தாக்கத்தால் சூரஜ் என்ற இளைஞர் மரணமடைந்துள்ளார். முதலில் மூச்சுத்திணற ஏற்பட, உடனே வாரை அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவருக்கு முதலுதவி கொடுத்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதுதொடர்பான தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலரும், விஜய் பேசியதை வைத்து விமர்சித்து வருகிறார்கள். சேலம் பொதுக் கூட்டத்தில் உயிரிழந்த சுராஜின் குடும்பத்தினரையும் தனது பனையூர் இல்லத்திற்கு வரவழைத்து ஆறுதல் கூறுவார் என்று காட்டமாக விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இரண்டரை வயது குழந்தை
இதனையடுத்து சேலத்தில் நடந்த விஜய்யின் பிரச்சாரத்தின் போது இரண்டரை வயது குழந்தையை ஒரு பெண்மணி கூட்டிட்டு வந்துள்ளார். அவரிம் ஏன் குழந்தையை அழைத்து வந்தீர்கள் என்று கேட்டதற்கு விஜய் அண்ணாவுக்காக தான் வந்தேன், பாதுகாப்பு இருக்கிறது என்பதால் கூட்டிட்டு வந்தேன் என்று கூறியிருக்கிறார். மேலும் ஒரு பெண், விஜய் அண்ணாவுக்கு பின் தான் மனசாட்சியே என்று கூறியிருக்கிறார். அந்த பெண்கள் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
41 பேர் செத்த போது இப்படி தான் normal ஆ இருக்க நம்ம எல்லாரும் கண்ணீர் சிந்தினோம்..
— Jaya Kanagaraja (@Jayakanagaraja) February 14, 2026
ஆனால்! அப்ப கூட அந்த ரசிக வெறி ஜோம்பீஸ் கூட்டம் பழியை யார் மேலயாவது போட்டு விஜயை காப்பாத்த தான் பாத்தாங்க 😡
அந்த Reporter க்கு உண்மையிலேயே பாராட்டுக்கள் 👏@News18TamilNadu @karthickselvaa pic.twitter.com/Q53fjALSHc