முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு..ஆகஸ்ட் 7ல் விசாரணை..

Vijay Sangeetha Vijay Divorce Chengalpattu
By Jai Aug 06, 2026 02:45 PM GMT
Report

விஜய் - சங்கீதா

தமிழகத்தின் முதலமைச்சர் விஜய் - சங்கீதா 1999ல் திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு பெற்றோராகிய பல ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு..ஆகஸ்ட் 7ல் விசாரணை.. | Vijay Sangeetha Divorce Case Hearing August 7Th

இந்த விவரம் பிப்ரவரி மாதம் தெரிய வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜய், சங்கீதா தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. மே மாதம் 19 அம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் ஜூன் 15 ஆம் தேதி வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார்.

அதன்பின் ஜூன் 15 ஆம் தேதி விசாரணையின் போது முதல்வர் விஜய், சங்கீதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் பாதுகாப்பு, இதர சிக்கல்களை கருத்தில் கொண்டு வீடியோ கான்பரன்ஸில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு..ஆகஸ்ட் 7ல் விசாரணை.. | Vijay Sangeetha Divorce Case Hearing August 7Th

விசாரணை

இதனையடுத்து வழக்கை நீதிபதி சுஜாதா விசாரணையை வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதன் அடிப்படையில் முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து, குடியிருப்பு உரிமை கோரி வழக்கு தொடர்ந்த நிலையில் நாளை ஆகஸ்ட் 7 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இருதரப்பினரும் பிரபலங்கள் என்பதால் நேரில் ஆஜராக விலக்கு கோரியுள்ள நிலையில், இருவரும் காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பிருப்பதாகவும் அதற்காக இணையதள முகவரி நாளை சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.