விஜய் - சங்கீதா விவாகரத்தில் நீதிபதி போட்ட உத்தரவு!! டைவர்ஸ் கன்ஃபார்ம்-ஆ?

Vijay Sangeetha Vijay Divorce
By Jai Apr 20, 2026 05:45 AM GMT
Report

விஜய் - சங்கீதா

தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவரும் நடிகருமான விஜய் மீது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு சமீபத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில், தன்னுடைய கணவர் விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், எவ்வளவோ கண்டித்தும் அதை திருத்திக்கொள்ளாமல், வெளிநாடுகளுக்கு செல்வதுமாக இருக்கிறார் என்றும் கூறி பல புகார்களை அளித்து மனுதாக்கல் செய்தார்.

விஜய் - சங்கீதா விவாகரத்தில் நீதிபதி போட்ட உத்தரவு!! டைவர்ஸ் கன்ஃபார்ம்-ஆ? | Vijay Sangeetha Divorce Case New Petitions Judge

இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தது. இருவரும் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், இன்று ஏப்ரல் 20 ஆம் தேதி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சசிகலா முன் 4வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்கு நீதிபதி சசிகலா ஒத்தி வைத்துள்ளார்.

விஜய் - சங்கீதா விவாகரத்தில் நீதிபதி போட்ட உத்தரவு!! டைவர்ஸ் கன்ஃபார்ம்-ஆ? | Vijay Sangeetha Divorce Case New Petitions Judge

நேரில் ஆஜராக உத்தரவிட்ட நிலையில், இருவரின் வழக்கறிஞர்கள் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், பரஸ்பரமாக இருவரும் பேசி பிரிந்துவிடுவதாக விஜய் - சங்கீதா தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. இதை ஏற்றுக்கொண்டு தான் நீதிபதி இந்த உத்தரவை போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.