வெற்றி விழாவிற்கு மனைவி சங்கீதாவை அழைத்து வராத விஜய்.. திரிஷா குறித்து இப்படி பேசிவிட்டாரே

Vijay Trisha Sangeetha Vijay
By Kathick Nov 03, 2023 12:30 PM GMT
Report

விஜய்க்கும் அவரது மனைவிக்கும் இடையே சில பிரச்சனைகள் இருப்பதாகவும், இதன் காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து உறுதியான தகவல் இதுவரை வெளிவரவில்லை. இது பொய்யான தகவல் உண்மையில்லை என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.

இந்த கிசுகிசு துவங்கிய பின் விஜய் தனது மனைவியுடன் சேர்ந்து எந்த ஒரு விழாவிற்கும் வரவில்லை. கடைசியாக மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தான் இருவரும் ஒன்றாக சேர்ந்த வந்தனர்.

அதன்பின் விஜய்க்கும் வேறொரு நடிகைக்கும் இடையே காதல் ஏற்பட்டுவிட்டது, இதனால் தான சங்கீதா விஜய்யை விட்டு பிரிந்துவிட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.

இந்த செய்தி வெளிவந்தபின் தனது கணவர் விஜய்யுடைய படத்தின் விழாவிற்கு சங்கீதா வரவில்லை. வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கும் வராத சங்கீதா, சமீபத்தில் நடந்த லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு கூட வரவில்லை.

இதனால் பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் மேடையில் நடிகை திரிஷாவை இளவரசி என குறிப்பிட்டு பேசினார்.

அவர் கூறியது பொன்னியின் செல்வன் படத்தில் வந்த குந்தவை இளவரசி கதாபாத்திரமாக இருந்தாலும் கூட, இணையத்தில் வேறு விதமாக கிசுகிசுக்க துவங்கிவிட்டனர்.

இது ஒரு எண்டே இல்லையா என கேட்கும் அளவிற்கு இந்த விஷயம் போய்க்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.