நான் ஏன் பயப்படணும்..அவங்க இருக்காங்களே!! சங்கீதா பற்றி விஜய் வெளிப்படையாக சொன்னது இதான்...

Vijay Gossip Today Sangeetha Vijay
By Edward Mar 24, 2026 12:00 PM GMT
Report

சங்கீதா - விஜய்

தன் கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி மனைவி சங்கீதா விவாகரத்து மனுதாக்கல் செய்தார்.

அவர் விவாகரத்து மனுதாக்கல் செய்த சில நாட்களில் நடிகர் விஜய் - திரிஷா இருவரும் சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஒரே நிறத்தில் ஆடையணிந்து சென்ற விவகாரம் இன்று வரை பேசுபொருளாக மாறியிருக்கிறது.

நான் ஏன் பயப்படணும்..அவங்க இருக்காங்களே!! சங்கீதா பற்றி விஜய் வெளிப்படையாக சொன்னது இதான்... | Vijay Sangeetha Throwback Video Trends Amid Trisha

பலர் இதுகுறித்து விமர்சித்து பேசி வரும் நிலையில், இதுகுறித்து எதுவும் பேசாமல், ஒரு கூட்டத்தில் இந்தப் பிரச்சனையெல்லாம் அவ்வளவு வொர்த் கிடையாது என்று அசால்ட்டாக பேசியிருந்தார்.

தற்போது விஜய் மற்றும் அவர் குறித்த வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடிகர் விஜய் திருமணத்திற்கு முன் விழா ஒன்றில் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

நான் ஏன் பயப்படணும்..அவங்க இருக்காங்களே!! சங்கீதா பற்றி விஜய் வெளிப்படையாக சொன்னது இதான்... | Vijay Sangeetha Throwback Video Trends Amid Trisha

நான் ஏன் பயப்படணும்

அதில் என்னுடைய வருங்கால மனைவி சங்கீதா பற்றி சொல்ல வேண்டுமென்றால் என்று கூறி அநியாயத்துக்கு வெட்கப்பட்டுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அட கூச்சப்படாமல் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

அதற்கு விஜய்யோ, நான் ஏன் பயப்படணும், அப்பா, அம்மா பார்த்த பொண்ணுதான், அதான் அவங்க இருக்காங்களே என கூறினார். மேலும் அவங்க தமிழ் பொண்ணு, லண்டனில் செட்டிலாகிவிட்டார்கள், மெடிக்கல் சயின்ஸ் இறுதி ஆண்டு படிக்கிறாங்க என்று கூறியிருக்கிறார் விஜய்.