மகன் ஜேசன் சஞ்சய் பட நிகழ்ச்சிக்கு வராத சங்கீதா - விஜய்..இதுதான் காரணம்!! பிரபலம் ஓபன்..
ஜேசன் சஞ்சய்
சிக்மா படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் தான் விஜய் - சங்கீதா மகன் ஜேசன் சஞ்சய். சிக்மா படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பட பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார் ஜேசன்.
இதற்கிடையில் ஜேசனின் பெற்றோர்கள் விவாகரத்து சம்பவம் நடந்த நிலையில், சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார். இதனையடுத்து இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்களா? என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் சிக்மா படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சி நடந்தது. பலரும் எதிர்பார்த்த ஜேசனின் அம்மா சங்கீதா நிகழ்ச்சி வரவில்லை. முதலமைச்சராக இருக்கும் ஜேசன் சஞ்சய்யின் தந்தை விஜய்யும் நிகழ்ச்சி வரவில்லை.
இதுகுறித்து கேள்விகள் எழுந்து வந்த நிலையில், பத்திரிக்கையாளர் பிஸ்மி இதுகுறித்து பேசியுள்ளார்.
சங்கீதா - விஜய்
அதில், நீதிமன்றத்திற்கு வெளியே செட்டில்மெண்ட் பார்த்துக் கொள்ளலாம் என்று சங்கீதா, மனுவை வாபஸ் பெற்றிருக்கலாம். அதுமட்டுமில்லாமல் விஜய் இப்போது முதலமைச்சர். எனவே அவரது பெயருக்கு களங்கம் வரக்கூடாது என்று நினைத்து கூட வாபஸ் பெற்றிருக்கலாம். இருவரும் சேரப்போவது என்பது இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. சிக்மா படத்தின் விழாவுக்கு விஜய் வரமாட்டார் என்று முன்பே தெரியும். ஒருவேளை அந்நிகழ்ச்சிக்கு சங்கீதா பங்கேற்றிருந்தால், இதுகுறித்து யாராவது கேள்வி எழுப்பி இருப்பார்கள்.

அப்போது அவர் பதில் சொல்லி இருந்தாலும் பிரச்சனை, பதில் சொல்லாமல் சென்றாலும் பிரச்சனை. அந்த தர்மசங்கடத்தை தவிர்க்கத்தான் நிகழ்ச்சியை அவாய்ட் செய்திருப்பார் சங்கீதா. ஊடகங்களைகூட அந்த விழாவுக்கு அழைக்கவில்லை. சொந்த மகனின் பட விழாவிற்கு வராததால் விஜய்யை சாடிஸ்ட் என்று சிலர் சொல்கிறார்கள். அதெல்லாம் தேவையில்லாததாக நான் பார்க்கிறேன். அவர்கள் குடும்பத்தில் ஒரு பிரச்சனை நடக்கிறது.
இதில் மகனின் நிலைப்பாடு என்ன என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை அம்மா பக்கம் நின்றால், விஜய் எப்படி அந்நிகழ்ச்சிக்கு செல்ல முடியும். அதேபோல் இரண்டு பேருக்கும் இடையே என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரியாது. அப்படி இருக்கையில் அவரை சாடிஸ் என்று சொல்வது சரியானது இல்லை.
ஜேசனை சின்னதளபதி, குட்டி தளபதி என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. எதிர்காலத்தில் அவருக்கு பெரிய இடம் சினிமாவில் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, சிக்மா வெற்றி பெற்றால்தான் அவர் இயக்குநராக தொடர்ந்து பயணிப்பார், ஆனால் எனக்கு தெரிந்து ஜேசனுக்குள் ஒரு பெரிய மனமாற்றம் ஏற்பட்டு ஹீரோவாக நடிக்க முடிவு செய்திருக்கிறார் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.