விஜய் திருமணத்திற்காக எஸ் ஏ சந்திரசேகர் செய்த செய்கை!! மிரண்டு போன ரசிகர் மன்ற செயலாளர்...
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக திகழ்ந்து தற்போது சினிமாவில் இருந்து விலகி முழு அரசியல் பயணத்தை தொடங்கியவர் தான் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், கடந்த ஒரு ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். அரசியலை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் மனைவி சங்கீதாவின் விவாகரத்து, நடிகையுடன் தொடர்பு உள்ளிட்ட பல விஷயங்கள் பொதுவெளியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் ரசிகர் மன்ற செயலாளராக பணியாற்றிய ரவி ராஜா, விஜய் - சங்கீதா திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது குறித்து பகிர்ந்துள்ளார்.
50 ஆயிரம் ரசிகர்கள்
அதில், விஜய் - சங்கீதா திருமணம் சென்ன எழும்பூருக்கு அருகிலுள்ள ராணி மெய்யம்மாள் மண்டபத்தில் பிரமாண்டமாக நடந்தது. அதேபோல் திருமண வரவேற்பு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக 60 ஆயிரம் பத்திரிக்கைகள் அடித்து 60 ஆயிரம் பிரியாணிகள் புகாரி ஹோட்டலில் ஆர்டர் செய்யப்பட்டு 50 ஆயிரம் ரசிகர்கள் விஜய்யை பார்க்க திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடந்தது.
முதலில் இதை எஸ் ஏ சந்திரசேகர் என்னிடத்தில் கூறும்போது எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. நேரு ஸ்டேடியத்தில் அதிகபட்சம் 12 ஆயிரம் பேர் மட்டும் தான் அமர முடியும். அப்படி இருக்க 50 ஆயிரம் பேர் எப்படி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என்று அவரிடம் கேட்டேன்.
ஆனால் எஸ் ஏ சந்திரசேகர் மிகத்தெளிவாக திட்டமிட்டு காலை 7 மணி முதல் 10 மணி வரை ஒரு ரிசப்ஷனில் எஸ் ஏ ராஜ்குமார் லைட் மியூசிக் செய்தார். அந்நேரத்தில் 12 ஆயிரம் பேரை கலந்து கொள்ள வைத்தார். அதன்பின் 11 மணி முதல் 2 மணி வரை ஒரு ரிசப்ஷனின் தேவா லைட் மியூசிக் வைத்தார். அதில் 12 ஆயிரம் பேரை கலந்து கொள்ள வைத்தார். அதன்பின் 3 மணி முதல் 5 மணி வரை ஒரு ரிசப்ஷனும் 5 மணி முதல் 8 மணி வரை ஒரு ரிசப்சன் என திரையரங்கில் எப்படி நான்கு காட்சிகள் திரையிடுவார்களோ அப்படி 4 ரிசப்சன் வைத்து 50 ஆயிரம் பேரை கலந்து கொள்ள வைத்தார் எஸ் ஏ சந்திரசேகர்.
அந்தளவுக்கு பிரமாண்டமாக விஜய்யின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் என்னவென்றால் கூப்பன்கல் வழங்கப்பட்ட ரசிகர்கள் அனைவருக்கு மிகவும் கண்டிப்பான உத்தரவை எஸ் ஏ சந்திரசேகர் போட்டிருந்தார். பச்சை கலர் கூப்பன் காலை 7 மணிக்கு தான் வரவேண்டுமென்றால் காலை 7 மணிக்கு தான் வரவேண்டும், அவர்களுக்கு ஏற்ற நேரங்களில் அனுமதி கிடையாது என்ற உத்தரவை போட்டு மிகவும் சிறப்பாக நடந்தியதாக ரவி ராஜா தெரிவித்தார்.