ரஜினி மகள் திருமணத்தில் மனைவியுடன் நடிகர் விஜய்!! வைரலாகும் வீடியோ..
Vijay
Aishwarya Rajinikanth
Viral Video
Sangeetha Vijay
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய ஹீரோவாகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது கோட் படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த முதலே அனைத்து மீடியாக்களும் அவரை பற்றி ஏதாவது ஒரு செய்தியை பகிர்ந்துவிடுவார்கள்.
அதிலும் சமுகவலைத்தளத்தில் விஜய் குறித்த செய்திகளோ, வீடியோவோ பகிரப்பட்டு ட்ரெண்டாகிவிடும். அந்தவகையில் நடிகர் விஜய் தன் மனைவி சங்கீதாவுடன் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு சென்றுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஏற்கனவே சங்கீதாவை விட்டு விஜய் பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்ற தகவல் பரவி வர தற்போது இருவரும் ஜோடியாக சென்ற பழைய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.