அப்போ புரியல? காதல் வளையில் சிக்கிய விஜய்! நடிகையிடம் இருந்து காப்பாற்றிய எஸ் ஏ சந்திரசேகர்..

vijay sanghavi SAC
By Edward Mar 11, 2022 11:28 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக 80களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். மற்றவர்களை தூக்கிவிட்டதை போன்று தன் மகன் விஜய்யையும் எப்படியாவது உயர்ந்த இடத்தில் நிற்க வைத்து பார்க்க ஆசைப்பட்டுள்ளார் எஸ் ஏ சி.

அதன்படி நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தன் இயக்கத்தில் விஜய்யை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து பல படங்களில் நடிக்க வைத்தார். அந்த சமயத்தில் விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை  என மூன்று படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தும் வந்தவர் நடிகை சங்கவி. அதன்மூலம் இருவருக்கும் நெருக்கம் அதிகமாக கெமிஷ்ட்ரியும் நன்றாக அமைந்தது.

அதனால், விஜய்யுடன் ஜோடி போட்ட நடிகை சங்கவி மீது காதல் கிசுகிசுக்கள் எழுந்தது. இதை அறிந்து சுதாரித்துக்கொண்ட அவரது தந்தை இப்படியே போனாம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும் என்று யோசித்துள்ளார். அதன்பின் ஒரு பிளான் போட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து இனிமேல் அந்த நடிகையுடன் நடிக்கக்கூடாது என்று விஜய்க்கு கண்டீசன் போட்டுள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.

தந்தை வாக்கு தெய்வ வாக்கு என்று நினைத்து அப்படியே செய்தார். அதன் பலன் தான் தற்போது உச்சத்தை கொடுத்தது என்று பெருமையாக எஸ் ஏ சி நிமிர்ந்து கூறுவாராம்.