ரஜினி, விஜய்க்கு கொடுக்காத அப்படியொரு உழைப்பு! விக்ரம் படத்தில் வெச்சு செய்த விஜய் சேதுபதி..

Kamal Haasan Vijay Sethupathi Lokesh Kanagaraj Vikram Movie
By Edward Jun 03, 2022 03:30 PM GMT
Report

சிறு கதாபாத்திரங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நடித்து பின் மக்கள் செல்வம் என்ற பெயரை தன் உழைப்பால் தொட்டவர் விஜய் சேதுபதி. பிட்சா, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா ஆண்டவன் கட்டளை, சூதுகவ்வும் உள்ளிட்ட பல படங்களின் வெற்றியை தொடர்ந்து ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கும் நடிகராக திகழ்ந்தார்.

கதாநாயகனை தாண்டி தற்போது வில்லன் அவதாரம் எடுத்துள்ள விஜய் சேதுபதி, பேட்ட, மாஸ்டர் படத்திற்கு பிறகு உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். விக்ரம் படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி நடிப்பில் துவம்சம் செய்துள்ளார் என்று ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளார்கள். மாஸ்டர் பவானியையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு சந்தானம் ரோல் மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்று வருகிறது.

அதற்கு முழு காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். பேட்ட, மாஸ்டரில் இல்லாத விஜய் சேதுபதியை செதுக்கி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அப்படி பவானியையே மறக்க செய்துள்ளது சந்தானம் ரோல்.